![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/01/36957418-4a.webp)
சென்னை,
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/01/36957651-4.webp)
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இன்று இந்த படம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டம் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்கில் இந்த படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக இருந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் கூடுதல் காட்சிகளுடன், கூடுதல் ரன்னிங் டைமில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்த படத்திற்கு சர்வதேச விருது கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்