சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி

1 day ago 1

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்திய வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். ஜாமி ஓவர்டான் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் எடுப்பது இது 2-வது (ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) முறையாகும். ஆனால் அந்த போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டு தோல்வியடைந்த போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வித்தியாசமான சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார்.

Read Entire Article