சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து முன்னணி வீரர்

16 hours ago 2

வெல்லிங்டன்,

நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் (வயது 38). இவர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2586 ரன்னும், 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7346 ரன்னும், 122 டி20 போட்டிகளில் ஆடி 3531 ரன்னும் எடுத்துள்ளார்.

இவர் நியூசிலாந்து அணிக்காக கடைசியாக 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். அதன்பின்னர் நியூசிலாந்து அணியில் இடம் பிடிக்காக கப்தில் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்ல் 237* ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் கட்ந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனியை ரன் அவுட் ஆக்கியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article