சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா- தாய்லாந்து இன்று மோதல்

1 day ago 6

பதும் தானி,

இந்தியா - தாய்லாந்து அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள பதும் தானி நகரில் உள்ள தம்மாசாட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. உலக தரவரிசையில் 127-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய கோப்பை தகுதி சுற்றில் தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி ஹாங்காங்கை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

இதேபோல் தரவரிசையில் 99-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்து அணி, துர்க்மெனிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராவதற்கு இந்த நட்புறவு ஆட்டம் உதவிகரமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் இந்தியா 7 ஆட்டத்திலும், தாய்லாந்து 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை பேன்கோடு செயலியில் பார்க்கலாம்.

Read Entire Article