லாசானே,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஜெய் ஷா. இவர், நேற்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் சந்தித்து பேசினார்.
வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அதை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.