சரும வனப்புக்கு நெய் மசாஜ்!

3 months ago 18

நம்முடைய சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும், இளமையாகவும் இருக்க நெய் மசாஜ் உதவுகிறது. இந்த மசாஜை எப்படி செய்யலாம்? கொஞ்சம் விலை அதிகம் தான் என்றாலும் மாதம் ஒருமுறை இரண்டொரு ஸ்பூன் நெய் பயன்பாடு உண்மையில் நல்ல பலன் கொடுக்கும். நெய்யில் வைட்டமின், ஃபேட்டி ஆசிட் ஆகியவை அதிகமுள்ளதால் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இந்த நெய்யானது நமது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. நம்முடைய சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும், இளமையாகவும் இருக்க நெய் மசாஜ் உதவுகிறது. இந்த மசாஜை எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து கொள்வோம்.சரியான நெய்யை தேர்ந்தெடுக்கவும் உயர் தரமான, இயற்கை முறையில் கிடைக்கும் நெய்யை எப்போதும் பயன்படுத்துங்கள். இது சுத்தமாக இருப்பதோடு நமக்கு சிறந்த பாதுகாப்பும் கிடைக்கும். சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.

முதலில் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நாம் போட்டுள்ள மேக்கப்பை அகற்றுங்கள். சிறிய அளவு நெய்யை பாத்திரத்தில் இட்டு சூடுபடுத்தவும். தாங்கக்கூடிய சூடு வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். அதற்கென்று ரொம்பவும் சூடுபடுத்தக் கூடாது. உங்கள் சருமம் தாங்கக்கூடிய அளவு சூடுபடுத்தினால் போதும்.சூடான நெய்யை கையில் எடுத்து உங்கள் முகத்தில் மென்மையாக வட்ட வடிவில் தடவவும். முகத்தில் கோடுகள், தழும்புகள் இருக்கும் இடங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கவனமாக தடவுங்கள். முகத்தில் சுருக்கங்கள் அதிகமுள்ள இடங்கள், குறிப்பாக கண்களைச் சுற்றிலும் வாய்ப் பகுதிகளிலும் மென்மையாக நெய் மசாஜ் செய்யுங்கள்.முகத்தை நன்றாக மசாஜ் செய்த பிறகு, உங்கள் கழுத்து, தோள், கைகள், மார்பகம், வயிறு, முதுகு, கால்கள் ஆகியவற்றை சூடான நெய் பயன்படுத்தி மென்மையான முறையில் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். ரொம்பவும் அழுத்தி மசாஜ் செய்துவிட கூடாது என்பதில் கவனமாக இருங்கள். முக்கியமாக இணைப்பு பகுதிகள் மற்றும் கை, கால்களுக்கு கூடுதல் கவனம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள்.

எப்படி மசாஜ் செய்ய வேண்டும்?

மசாஜ் செய்வதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. உங்கள் கையில் சிறிய அளவு நெய் எடுத்து, மென்மையாக வட்ட வடிவிலும், மேல் நோக்கியும், மென்மையாக கிள்ளியபடியும் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்வதால் நம்முடைய உடலில் உள்ள கொலாஜன் உற்பத்தி அதிகமாகும். நாம் மசாஜ் செய்த நெய் நன்றாக உடலுக்குள் ஊடுருவதற்கு ஏதுவாக 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே இருங்கள். உடனடியாக மசாஜ் செய்த நெய்யை அகற்றிவிடாதீர்கள்.முகம் அலசுதல் அல்லது அப்படியே உலரவிடுதல்இப்போது உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள். இல்லையென்றால் இரவு முழுவதும் முகத்தில் நெய் ஊடுருவதற்கு ஏதுவாக அப்படியே உலரவிடுங்கள்.

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் அதிகமாக வயிற்று வலியால் அவதிப்படுகிறவர்களுக்கு நெய் மிகச்சிறந்த தீர்வாக பயன்படுகிறது.நெய்யை தினமும் சில துளிகள் எடுத்து தொப்புளில் விட்டு மசாஜ் செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும். தினமும் தொப்புளில் நெய் தடவுவதன் மூலம் ஒரு வாரத்தில் உங்களால் சிறந்த பயனை அடைய முடியும்.நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள் நாள்பட்ட மூட்டு வலியையும் குறைக்கச் செய்யும். மற்ற மருந்துகளைக் காட்டிலும் எண்ணெய் மற்றும் நெய்க்கு ஹீலிங் பண்புகள் அதிகம். அதனால் தினமும் தொப்புளில் நெய் தடவி மசாஜ் செய்து வந்தாலும்கூட மூட்டு வலி மற்றும் எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்னை தீரும்.உங்களுடைய உள்ளங்காலில் நெய் கொண்டு மசாஜ் செய்வதால், முகத்திற்கு அற்புதமான பொலிவு கிடைக்கும். நிறைய சரும பிரச்னைகளும் தீரும். இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள், தூங்கும் முன் உள்ளங்கால்களை நெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். தூங்கும் போது சத்தமாக குறட்டை விடுவோரின் உள்ளங்கால்களில் நெய் தடவுங்கள். குறட்டைக்கு குட் பை சொல்லலாம். அஜீரணம் அல்லது வயிற்றில் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தூங்கும் முன் பாதங்களை நெய் கொண்டு மசாஜ் செய்தால், உங்கள் மனதை இளகுவாக மாற்றி உங்களுடைய டென்ஷனைப் போக்கும். உள்ளங்காலில் நெய் பூசுவதால் உடல் எடையை கூட கட்டுக்குள் வைக்கமுடியும்.
– கவிதா பாலாஜிகணேஷ்

நெய்க்கு பதிலாக…

நெய் விலை அதிகம். எல்லாருக்கும் தினமும் நெய் பயன்படுத்துவது சிரமமான விஷயம் தான். இதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கோகம் வெண்ணெய் பயன்படுத்தலாம். இதுவும் அதே பலன்களை தரும்.

The post சரும வனப்புக்கு நெய் மசாஜ்! appeared first on Dinakaran.

Read Entire Article