கோடை வந்தாலே சரும பிரச்னைகளும் தானாக வந்து சேரும். சரும கருமையை (skin pigmentation) நீக்க உதவும் சில இயற்கையான ஃபேஷியல் பேக்குகள் இதோ. இவை வீட்டிலேயே செய்யக்கூடியவை:
பாதாம் & பால் பேக்
தேவைப்படும் பொருட்கள்:
* 5 பாதாம்
* 2 மேசைக்கரண்டி பால்.
செய்முறை:
* பாதாம்களை இரவில் பசும் பாலில் ஊற வைக்கவும்.
* காலை அந்த பாதாம்களை , பாலுடன் அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவவும்.
* 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
* வாரத்தில் 3 முறை செய்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.
தேவைப்படும் பொருட்கள்:
* 1 மேசைக்கரண்டி சந்தனப் பொடி.
* தேவையான அளவு ரோஸ் வாட்டர்.
செய்முறை:
* இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்யவும்.
* முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு கழுவவும்.
* இது முகத்தில் உள்ள கருமையை குறைக்கும்.
தக்காளி & தயிர் பேக்
தேவைப்படும் பொருட்கள்:
* 1 மேசைக்கரண்டித் தக்காளிச் சாறு.
* 1 மேசைக்கரண்டி தயிர்.
செய்முறை:
* இரண்டையும் கலந்து முகத்தில் தடவவும்.
* 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
* இது பளிச்சென்ற சருமம் பெற உதவும்.
* தக்காளி இயற்கையாகவே சருமத்தில் ரோஸ் நிறம் கொடுக்கும்.
கடலை மாவு & கஸ்தூரி மஞ்சள் பேக்
தேவைப்படும் பொருட்கள்:
* 1 மேசைக்கரண்டி கடலை மாவு
* ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள்
* தேவையான அளவு பால்.
செய்முறை:
* அனைத்து பொருட்களையும் கலந்து முகத்தில் தடவவும்.
* 15 நிமிடங்கள் விட்டு கழுவவும்.
* வாரத்தில் 2 முறை பயன்படுத்தலாம்.
– விஜி
The post சரும கருமைக்கு அருமையான ஃபேஷியல் பேக்! appeared first on Dinakaran.