சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை

3 months ago 25

மும்பை,

மத்திய கிழக்கில் போர் பதற்றம், ரேப்போ வட்டி விகிதம் உள்பட பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, நிப்டி 51 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 947 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 437 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 92 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், 220 புள்ளிகள்வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 387 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

199 புள்ளிகள்வரை சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 563 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 40 புள்ளிகள்வரை சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 877 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 440 புள்ளிகள்வரை சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 177 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சரிவில் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை மதியம் ஏற்றம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article