மும்பை,
உலக அளவில் கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வந்தன. இது இந்திய பங்குசந்தையிலும் எதிரொலித்தது. இதையடுத்து, நேற்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவைடந்தது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 31 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 981 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 14 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 7 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், 167 புள்ளிகள்வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 467 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.
அதேவேளை, 93 புள்ளிகள்வரை ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 546 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 99 புள்ளிகள்வரை ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 974 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.
மேலும், 174 புள்ளிகள்வரை ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 980 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.