சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

3 months ago 16

 

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 781 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 131 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 962 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், 73 புள்ளிகள்வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 151 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

339 புள்ளிகள் சரிவை சந்தித்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 694 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 216 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 115 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 16 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 954 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Read Entire Article