சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல, மாறாக நமது குடும்ப விழா. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டுக்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மாநாட்டின் முதன்மை அம்சம் உங்களின் வருகைதான். நீங்கள் இல்லாமல் மாநாடு இல்லை.
லட்சக்கணக்கில் நீங்கள் வந்தால்தான் மாநாடு முழுமை பெறும். மாநாட்டுக்காக நான் விடுத்த அழைப்புகளை ஏற்று மாமல்லபுரத்தை நோக்கி அணிவகுக்க நீங்கள் அனைவரும் தயாராகி விட்டீர்கள் என்பதை அறிவேன். ஆனாலும், மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை. ஆகவே, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன், மாமல்புரம் நோக்கி அணி வகுக்கத் தயாராகுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு மாமல்லபுரம் நோக்கி அணிவகுக்க தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.