சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1200 வீதம் உதவித்தொகை பெற ஆணைகள்

8 hours ago 1

*மாவட்ட கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1200 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 110 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நீலகிரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட நன்கொடைகள் அதற்கு தமிழ்நாடு அரசால் 1:2 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானிய தொகை ஆகிய ஒருங்கிணைந்த தொகையில் இருந்து 3 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1200 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய திட்டத்தின் கீழ் 30 சதவீத மானியத்தில் வர்க்கி தொழில் துவங்க கூக்கல்தொரை பகுதியை சேர்ந்த அம்பிகா என்பவருக்கு ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 280 மதிப்பில் காசோலை, உபதலை பகுதியை சேர்ந்த லீலா என்பவருக்கு ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 86க்கான காசோலையையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் வசந்த் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1200 வீதம் உதவித்தொகை பெற ஆணைகள் appeared first on Dinakaran.

Read Entire Article