தேவையான பொருட்கள்:
சப்பாத்தி- 2
முட்டை – 3
மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த பச்சைப் பயிறு –
4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு, அடுப்பில் தோசை கல் வைத்து எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி முட்டையில் பாதியை ஊற்றி நன்கு பரப்பவும் அதன் மீது சுட்டு வைத்த சப்பாத்தி வைத்து வேக வைக்கவும். வெந்ததும் வேக வைத்த பயிரை உப்பு சேர்த்து கிளறி சப்பாத்தி நடுவில் வைத்து சுருட்டி நான்கு துண்டுகளாக வெட்டவும். சுவையான சப்பாத்தி முட்டை ரோல் தயார்
The post சப்பாத்தி முட்டை ரோல் appeared first on Dinakaran.