
புதுடெல்லி,
போலி வாக்காளர்களை உருவாக்க பா.ஜனதாவுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறது என மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார்.
இன்று மக்களவையில், வக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றார். இத்தகைய சூழலில் சபாநாயகர் ஓம்பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சபாநாயகர் ஓம்பிர்லா- ராகுல்காந்தியுடனான சந்திப்பின் போது, பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். ஓம் பிர்லாவுடனான சந்திப்பின் போது, பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபைகளுக்கு தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். குறிப்பாக வாக்களர்பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் இடம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாக சொல்லப்படுகிறது.