சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் புதிய அணி - பவன் கல்யாண் அறிவிப்பு

2 months ago 11

அமராவதி,

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வாராஹி படை' புதிய அணியை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய பவன் கல்யாண், "இந்து கோவில்களுக்குச் செல்லும்போதும், சனாதன தர்மத்தைப் பின்பற்றும்போதும் சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம். இந்து மதத்தையோ, சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது.

சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்." என்று அவர் தெரிவித்தார்.

Read Entire Article