வந்தவாசி, மே 23: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(70). இவருக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதாம். அதனை வீட்டில் உள்ள தோட்டத்தில் நட்டு வளர்த்து வருகிறார். அதில் ஒரு சந்தனமரமும் இருந்துள்ளது. இந்நிலையில் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் நன்கு வளர்ந்திருந்த அந்த சந்தன மரத்தை யாரோ மர்ம ஆசாமிகள் கடந்த 20ம் தேதி வெட்டி கடத்திச்சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்லம்மாள், இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சந்தனமரம் வெட்டிக்கடத்தல் வந்தவாசி அருகே வீட்டில் வளர்த்த appeared first on Dinakaran.