தேவையான பொருட்கள்
பச்சரிசி – 100 கிராம்
கருப்பட்டி அல்லது நாட்டுச்
சர்க்கரை – தேவையான அளவு
பாதம் பிசின் – 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
தேங்காய்ப் பால் – 4 டம்ளர்
சப்ஜா விதை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டி – தேவைக்கேற்ப.
செய்முறை
பச்சரிசியை ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து இட்லியாக ஊற்றி எடுக்கவும். சூடாக இருக்கும் போதே சந்தகை மனையில் பிழிய அரிசி சந்தகைக் கிடைக்கும். கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது சிறிதாக நறுக்கிய சந்தகை, காய்ச்சிய நாட்டுச்சர்க்கரை, ஊற வைத்த பாதாம் பிசின், ஊறவைத்த சப்ஜா விதை மற்றும் தேங்காய்ப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். டம்ளரில் ஊற்றி தேவைக்கு ஏற்ப ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும். சுவையான சந்தகை சர்பத் தயார்.
The post சந்தகை சர்பத் appeared first on Dinakaran.