சத்துணவு மையங்களில் 63,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தல்

2 hours ago 1

திண்​டுக்​கல்: தமிழகத்​தில் காலி​யாக உள்ள 63 ஆயிரம் சத்​துணவுப் பணி​யாளர்​கள் பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் என்று முன்​னாள் எம்​எல்ஏ பால​பாரதி கூறி​னார். தமிழ்​நாடு சத்​துணவு ஊழியர் சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு திண்​டுக்​கல்​லில் நடை​பெற்​றது. மாநாட்டு வரவேற்​புக் குழுத் தலை​வர் சுகந்தி வரவேற்​றார்.

இதில் முன்​னாள் எம்​எல்ஏ பால​பாரதி பேசி​ய​தாவது: மிகக் குறைந்த ஊதி​யத்​தில் பணி செய்​யக்​கூடிய சத்​துணவு ஊழியர்​களின் உழைப்பு சுரண்​டப்​படு​கிறது. சிறப்பு கால​முறை ஊதி​யம் பெறும் சத்​துணவு ஊழியர்​களுக்​கும், கால​முறை ஊதி​யம் பெறும் அரசு ஊழியர்​களுக்​கும் ஒரே மாதிரி​யான வரி போடு​வோம் என்​கிறது அரசு. இதில்​தான் உழைப்​புச் சுரண்​டல் இருக்​கிறது. காலி​யாக உள்ள 63 ஆயிரம் சத்​துணவுப் பணி​யாளர் பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

Read Entire Article