சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை... ஏ.கே. 47 துப்பாக்கி, வெடி பொருட்களும் பறிமுதல்

3 months ago 24
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாராயண்பூர் - தண்டேவாடா எல்லை பகுதியில் உள்ள மாத் என்ற இடத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சென்ற அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கனமழைக்கு நடுவே பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பஸ்தர் சர ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்து ஏ.கே. 47 உள்பட பல்வேறு துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article