சத்தீஷ்கார்: முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் நடந்த சி.பி.ஐ. சோதனை 14 மணிநேரத்திற்கு பின் நிறைவு

3 days ago 2

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலின் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை சோதனை செய்வதற்காக சென்றனர். மகாதேவ் சூதாட்ட ஊழல் தொடர்பாக இந்த சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சத்தீஷ்கார், போபால், கொல்கத்தா மற்றும் டெல்லி என 60 இடங்களில் நடந்த சோதனையின் ஒரு பகுதியாக ராய்ப்பூர் மற்றும் பிலாய் நகரங்களில் உள்ள பாகெலின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. 16 நாட்களுக்கு முன் பாகெல் மற்றும் அவருடைய மகன் சைதன்யா வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியிருந்தது. தவிர, 14 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு நபர்களிடம் இந்த சோதனை நடைபெற்றது. 14 மணிநேரத்திற்கு பின் சி.பி.ஐ. சோதனை இரவு 10 மணியளவில் நிறைவடைந்து உள்ளது. இதனையடுத்து பாகெலின் ஆதரவாளர்கள் அவருடைய வீட்டுக்கு முன் திரண்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article