சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 14 நக்சல்கள் சுட்டுக்கொலை

3 months ago 22

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் பகுதியில் உள்ள துல்துலி மற்றும் நெண்டூர் ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள வனப்பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்து ஏ.கே.-47 உள்பட பல்வேறு துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தற்போது பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டு பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் மொத்தம் 171 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article