சதம் அடித்ததை பல்டி அடித்து கொண்டாடிய பண்ட்.. வீடியோ வைரல்

1 day ago 3

லக்னோ,

18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணி தரப்பில் இந்த ஆட்டத்திலும் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக களமிறங்கியதால் கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும் விமர்சனத்திற்குள்ளான பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் சதமடித்ததை பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

When he hits, they stay as hit A Updates ▶ https://t.co/h5KnqyuYZE #TATAIPL | #LSGvRCB | @RishabhPant17 pic.twitter.com/Hka9HBgpFy

— IndianPremierLeague (@IPL) May 27, 2025

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஜிதேஷ் சர்மா 85 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர்.  

Read Entire Article