சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: அமைச்சரவையில் முடிவு

5 months ago 15

புதுடெல்லி: வரும் 2025-26ம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்தில் சணல் விலையை ரூ.5,650 ஆக அதிகரித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், 2025-26ம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்தில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.315 அதிகரிக்கப்பட்டு, குவிண்டால் ரூ.5,650 ஆக நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

40 லட்சம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாகவோ மறைமுகமாவோ சணல் தொழிலை சார்ந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதவிர, தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைவருக்கும் மலிவான, தரமான சேவையை வழங்கும் நோக்கில், பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டு 2013ல் விரிவுபடுத்தப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் திறம்பட செயல்பட்ட தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. கடந்த 2021 முதல் 2022ம் ஆண்டுக்கு இடையே சுமார் 12 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் இணைந்ததாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

The post சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: அமைச்சரவையில் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article