சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிக்கு வாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

1 month ago 12

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார்.

அப்போது, குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கவுதமன், என்.பரணிதரன் ஆகியோர் ஆஜராகி, அமலாக்கத்துறையின் பதில்மனுவை ஏற்க கூடாது. வங்கி ஊழியர்களின் விவரங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது என்றனர். இருதரப்பு வாதங்களை அடுத்து, அரசு தரப்பு சாட்சியான மணிவண்ணனுக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 4ம் தேதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

The post சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிக்கு வாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article