சட்டப் பேரவையில் வேல்முருகன் ‘சம்பவம்’ - முதல்வர் வேதனையும், அப்பாவு எச்சரிக்கையும்

15 hours ago 2

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் இன்றைய செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். வேல்முருகன் தன்னை திருத்திக் கொள்ளுமாறு பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான இன்று பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அதிமுக ஆட்சியில் ஒரு துறை சார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

Read Entire Article