சென்னை: சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை தொடர்பான வழக்கில் எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று 3 மாதங்களுக்கு முன்பே ஜாகிர் உசேன் புகாரளித்துள்ளார்.
யார் மீது புகாரளித்தாரோ அவர்களை அழைத்தே காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள், அதன் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்; சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் திமுக ஆட்சி கடுமையாக இருக்கும்.
நிலப்பிரச்சனையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்துள்ளனர். ஜாகிர் உசேன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கு தொடர்பாக 2 பேர் சரணடைந்த நிலையில், மற்ற எதிரிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். ஜாகீர் உசேன் கொலை வழக்கில் பாரபட்சம் இன்றி குற்றவாளிகள் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
The post சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது: ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.