சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை

17 hours ago 2

சென்னை,

ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதன்பிறகு, கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

தொடர்ந்து 2வது நாள் சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் , 3வது நாள் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது .தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சட்டசபைக்கு இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர் . .அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.

Read Entire Article