பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே பூமலை சஞ்சீவிராயர் மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் வழிதுணை ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா (30ம் தேதி) இன்று சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு அனுக்ஜை பூஜை, கலசபூஜை, சுப்ரபாதம், சுதர்சன ஹோமம் நடந்தது. பின்னர் 6 மணிக்கு பெரிய திருமஞ்சனம், 7.30 மணிக்கு கும்ப அபிஷேகம், 8 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று மாலை 6 மணியளவில் விஷ்வசேனர் ஹோமம், கலச பூஜை, திருவராதனம், தீபாராதனை நடந்தது. இந்த விழாவில் பாடாலூர் இரூர், பெருமாள்பாளையம், திருவளக்குறிச்சி, ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, கூத்தனூர், சீதேவி மங்கலம், புதுக்குறிச்சி, தெரணி, காரை, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அனுமனை வழிபட்டனர்.
The post சஞ்சீவிராயர் மலை கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா; திரளான பக்தர்கள் தரிசனம்! appeared first on Dinakaran.