சச்சின் ரோகித் இல்லை.. கவாஸ்கருக்குப்பின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவர்தான் - கங்குலி

3 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு பெரும் பங்களித்த அவர், 2015-ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இருப்பினும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் இவரது பேட்டிங் ஸ்டைல் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியிடம், சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்திய அணியின் சிரந்த தொடக்க ஆட்டக்காரர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்குலி, "என்னை பொறுத்தவரை சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்திய அணி கண்டெடுத்த மிகச்சிறந்த தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்தான்" என்று பதிலளித்தார்.

Read Entire Article