
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் கடந்த 1-ம் தேதி முதல் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்தலும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர்.
தேரோட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.