கோவையில் தர்பூசணி வரத்து துவங்கியது

3 hours ago 1

 

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் இருந்து வருகிறது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பலர் உடலுக்கு குளிச்சியூட்டும் உணவுகளை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். தவிர, கம்பங்கூழ், நீர்மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றையும் குடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் வெயில் காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் வகையிலான தர்பூசணி பழங்களின் வரத்து துவங்கியுள்ளது. அதன்படி, ஆந்திரா, திண்டிவனம் பகுதியில் இருந்து கோவைக்கு தர்பூசணி பழங்களின் வரத்து உள்ளது. இவை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளனர். சாலையோரம் மற்றும் பழக்கடைகளில் தர்பூசணி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கோவையில் தர்பூசணி வரத்து துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article