கோவை வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில்

2 days ago 4

கோவை,

தென் இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோடைகால பயணிகள் நெரிசலை தவிர்க்க கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதன்படி பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில்(06555) வருகிற 4-ந்தேதி மற்றும், 11,18,25, மே மாதம் 2,9, 16,23,30 ஆகிய தேதிகளில் இரவு10 மணிக்கு வெள்ளிக்கிழமை தோறும் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.

இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு 06556 என்ற வாராந்திர ரெயில் பகல் 2-15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறது. வருகிற 6-ந்தேதி மற்றும் 13, 20, 27, மே 4, 11,18,25, ஜூன் 1-ந்தேதி ஆகிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படுகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து புறப்படும்பேது போத்தனூருக்கு காலை 6.10 மணிக்கு வந்து 6.15 மணிக்கு புறப்படுகிறது.திருவனந்தபுரத்தில் இருந்து பற்பபடும்போது இரவு 10.58 மணிக்கு வந்து 11 மணிக்கு புறப்படுகிறது.பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம் , பங்காருபேட்டை, ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம்(வடக்கு), கோட்டயம்,திருவில்லா, செங்கனூர், காயன்குளம, கொல்லம், வர்கலா சிவகிரி வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. இந்த ரெயிலுக்கான முன்பதவு இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article