சேலம், ஜூன் 24: சேலம் வழியே இயக்கப்படும் கோவை-தன்பாத் சிறப்பு ரயில், இன்று 8.25 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680), இன்று (24ம் தேதி) காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால், மறுமார்க்கத்தில் இருந்து இணை ரயில் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அந்த ரயில் 8.25 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த கோவை-தன்பாத் சிறப்பு ரயில், 8.25 மணி நேரம் தாமதமாக புறப்படுவதால், கோவை மட்டுமின்றி வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் தாமதமாக வந்துச்செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவை-தன்பாத் ரயில் இன்று 8.25 மணி நேரம் தாமதமாகும் appeared first on Dinakaran.