கோவை: கோவில்பாளையம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ரவுடியை போலீஸ் சுட்டுப் பிடித்தது. மிரட்டல் புகாரில் கைதான ரவுடி ஹரிஸ்ரீயின் துப்பாக்கியை பறிமுதல் செய்ய போலீஸ் அழைத்துச் சென்றது. சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் தனது துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டியுள்ளார் ஹரிஸ்ரீ. துப்பாக்கியை பறிமுதல் செய்ய போலீஸ் அழைத்துச் சென்றபோது ரவுடி ஹரிஸ்ரீ தப்பிக்க முயன்றுள்ளார்.
தப்பியோட முயன்ற ரவுடி ஹரிஸ்ரீயின் இடதுகாலின் கீழ் சுட்டுப் பிடித்தது கோவை மாவட்ட போலீஸ். போலீசார் சுட்டுப் பிடிக்க முயன்றதில் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூலூர் அடுத்த அரசூர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எஸ்பி கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.
The post கோவை: கோவில்பாளையம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ரவுடியை சுட்டுப் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.