![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38290641-kovil-thiruvila.webp)
கர்நாடகா ,
கர்நாடகா ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சேசகிரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கங்கா பரமேஸ்வரி கோவிலின் கலச பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கிரேன் கொண்டுவரப்பட்டு அதில் தொட்டிபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. கலசத்தை பொருத்த கிரேனின் தொட்டி போன்ற அமைப்பில் 3 பேர் இருந்த நிலையில் பாரம் தாங்காமல் முறிந்து கீழே விழுந்தது.
தொட்டியானது கோவில் திருவிழாவை காணவந்திருந்த பக்தர்கள் மீது விழுந்ததில் மஞ்சுநாத் (வயது 48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து முறையான பாதுகாப்பு ஏற்படுத்தாத கோவில் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.