கோவிலம்பாக்கம் பகுதியில் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ரூ8 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர்: போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

3 months ago 14


வேளச்சேரி: வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம், திருநகரை சேர்ந்த வினோத் விட்டல்(35). இவரது மொபைல் போனில் வெல்த் ஆர்க் சேமிப்பில் சேர்ந்து 200 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என விளம்பர தகவல் வந்துள்ளது. இதை நம்பி அந்த தகவலில் தெரிவிக்கப்பட்ட வெல்த் ஆர்க் சேவிங் எனும் குழுவில் வினோத் மிட்டல் இணைந்துள்ளார். இதையடுத்து அந்தக் குழுவின் தலைவர், பேராசிரியர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, பின்னர் தனது உதவியாளர் தொழில் விவரம் குறித்து விளக்குவார் என கூறி உள்ளார். இதையடுத்து குழு தலைவரின் உதவியாளர் போன் வினோத் மிட்டலை தொடர்பு கொண்டு, தங்கள் நிறுவனத்தின் பெயர் ‘சாம்கோ சர்வீஸ் டிரேடிங் குரூப்ஸ்’, இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு 200 மடங்கு பணம் திரும்ப கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

அதை உண்மையென நம்பி, வினோத் மிட்டல் கடந்த ஜனவரி மாதம் 3 முதல் 27ம் தேதி வரை ஆன்லைன் முதலீட்டில் ஈடுபட்டு இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகப் பெற்றுள்ளார். பின்னர் அந்த தொகையை மறுபடியும் முதலீடு செய்தபோது, 35 லட்சம் ரூபாய் மிட்டலின் கணக்கில் லாபமாக வந்திருப்பதாக நிறுவனத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. அந்தப் பணத்தை பெறுவதற்கு சேவை கட்டணமாக 6.16 செலுத்தும்படி நிறுவனம் கூறி உள்ளது. அதன்படி, ஜனவரி 27ம் தேதி பணம் செலுத்தி உள்ளார். அப்போது, வரி 5.5 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும் என நிறுவனத்திடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த வினோத் மிட்டல் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தான் இழந்த ரூ8.16 லட்சத்தை மீட்டுத் தரும்படி, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கோவிலம்பாக்கம் பகுதியில் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ரூ8 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர்: போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article