
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோவளம் கடற்கரைக்கு அமெரிக்காவை சேர்ந்த 75 வயது பெண் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அவர் இன்று கோவளம் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கிக்கொண்டார். உடனடியாக அவருடன் வந்த ரஷியாவை சேர்ந்த பெண் தோழி காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வியடைந்த ரஷிய பெண் காயமடைந்தார்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ரஷிய பெண்ணை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கடலில் மூழ்கிய அமெரிக்க பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.