கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது

6 months ago 20

ஊத்தங்கரை, நவ.12: ஊத்தங்கரை அடுத்த நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், கூண்டுக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்று, கோழிகளை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகம், இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, எடுத்துச்சென்று அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.

The post கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது appeared first on Dinakaran.

Read Entire Article