"கோர்ட் " படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியானது

1 week ago 3

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.

நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் 'கோர்ட்' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் நானி தயாரித்த 'கோர்ட்' படம் மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், "கோர்ட்" படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Know more about the mainstays of our courtroom - the lawyers of #COURT ❤A special BTS video now!▶️ https://t.co/KFC76JAf2D Natural Star @NameisNani Presents#COURT - 'State vs A Nobody' ⚖️In Cinemas March 14th.Starring @PriyadarshiPN Directed by #RamJagadeeshpic.twitter.com/8saTTkyXSM

— Wall Poster Cinema (@walpostercinema) February 2, 2025
Read Entire Article