கோர்ட் உத்தரவையடுத்து கண்மாய் பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

3 hours ago 3

 

திருமயம், மார்ச் 19: அரிமளம் அருகே கோர்ட் உத்தரவின்படி கண்மாய் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அளவு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள காரமங்கலம் துறையூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஆண்டமையேந்தல் கண்மாயில் அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டி கீரணிப்பட்டியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அதனை அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட கண்மாய் பகுதியில் சரக வருவாய் ஆய்வாளர் மாயக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரண்யா, சர்வேயர் கலாராணி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கே.புதுப்பட்டி போலீசார் உதவியுடன் அளவை செய்தனர். அப்போது கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மூன்று மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோர்ட் உத்தரவையடுத்து கண்மாய் பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article