கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

2 days ago 1

 

திருப்பூர், ஏப். 2: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140ஐ ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தீயிட்டு கொழுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த, போராட்டத்திற்கு கோட்டத்தலைவர்கள் வெங்கிடுசாமி, கருப்பன், செவந்திலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி, கோட்ட செயலாளர்கள் ராமன், பாலசுப்பிரமணியன், தில்லையப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த, போராட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திடு, அரசாணை 140ஐ ரத்து செய்ய வேண்டும், மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கார்பரேட்கள் சுங்கவரி வசூலிப்பத்தை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 60 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article