கரூர், பிப். 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழநாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் இளங்கோ வரவேற்றார். இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகி ஜீவானந்தம் துவக்கவரையாற்றினார். மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். மாநில துணைத்தலைவர் அம்சராஜ் கலந்து கொண்டும் பேசினார்.இந்த தர்ணா போராட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த மோகன்ராஜ், சாமுவேல் சுந்தரபாண்டியன், கண்ணன், சக்திவேல், சங்கர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணி நன்றி கூறினார்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்திசெய்து இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
The post கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.