கோயில் மனைகளுக்கு பழையபடி பகுதி முறையை அமல்படுத்தக் கோரி சென்னையில் பேரணி 

1 week ago 5

சென்னை: கோயில் மனைகளுக்கு, வாடகை நிர்ணயப்பதில் பழையபடி பகுதி முறையை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனைகளில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.

கோயில் மனைகளுக்கு சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயிப்பதை ரத்து செய்து, பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும்; பகுதி முறைக்கு மாற்றும் வரை அரசாணை 208-ன்படி அமைக்கப்பட்ட கமிட்டியின் முடிவு வரும் வரைக்கும் பழைய வாடகையை பெற்றுக்கொள்ள வேண்டும், மேலும் தற்போது குடியிருப்பவருக்கே நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்; அத்தியாவசியத் தேவைகளான மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும், கோயில் பெயரிலேயே இணைப்பை பெற வேண்டும் என்றும் வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனைகளில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பில், கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article