கோயில் சொத்துகளை காப்பாற்றக்கோரி வேதகிரீஸ்வரர் கோயிலில் மீட்புக்குழுவினர் பிரார்த்தனை

2 months ago 10

 

திருக்கழுக்குன்றம், நவ.17: திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயில் சொத்துக்களை காப்பாற்றக்கோரி, வேதகிரீஸ்வரர் கோயில் சொத்துக்கள் மீட்புக்குழு சார்பில் மலைகோயில் அடிவாரத்தில் கற்பூரம் ஏற்றி பிராத்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயில் சொத்துகளை காப்பாற்ற வேண்டியும், சொத்துகள் அபகரிப்புக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டியும், “வேதகிரீஸ்வரர் கோயில் சொத்துகள் மீட்புக்குழு” சார்பில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில் கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.

நிகழ்ச்சிக்கு துரை தனசேகரன் தலைமை தாங்கினார். இதில், சொத்துக்கள் மீட்புக்குழுவைச் சேர்ந்தவர் மற்றும் பவுர்ணமிக்காக மலையைச்சுற்றி கிரிவலம் வந்த பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது, கோயில் சொத்துகளை கண்டறிந்து மீட்க வேண்டும், சிவன் சொத்துகளை மீட்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடிக்கக் கூடாது என்றும், வேதகிரீஸ்வரர் சொத்துகளை அபகரிப்பவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படக் கூடாது என்றும் கோஷம் எழுப்பப்பட்டது. இதுவரையில் எங்கும் நடக்காதவாறு வித்தியாசமாக நடந்த இந்த பிரார்த்தனை போராட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.

The post கோயில் சொத்துகளை காப்பாற்றக்கோரி வேதகிரீஸ்வரர் கோயிலில் மீட்புக்குழுவினர் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Read Entire Article