கோயம்பேட்டில் சீசன் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு

3 weeks ago 5

அண்ணாநகர்: பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் சேலம், அரியலூர், பண்ருட்டி, கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வள்ளி கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் பிடி கிழங்கு, கருணை கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி ஆகியவை வந்து குவிந்துள்ளன. இதன்காரணமாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த 4 நாட்களாக விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80ல் இருந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறு, மொத்த வியாபாரிகள் தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘மார்க்கெட்டுக்கு சீசன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளது. இதனால் மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சின்ன வெங்காயம் கடந்த 4 நாட்களாக அதே விலையில் நீடித்து வருகிறது,’ என்றார்.

 

The post கோயம்பேட்டில் சீசன் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article