மாதவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியம் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்த வளாகத்தின் சுற்றுப்புற தூய்மையை கருத்தில்கொண்டு வியாபாரிகள், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு உத்தரவின்படி, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிவறைகளாக இருந்த கழிவறைகள் அனைத்தும் கட்டணமில்லாத பொது கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இங்கு மொத்தம் உள்ள 68 கழிவறைகளில் பெண்களுக்கென 23 கழிவறைகள் ஒதுக்கப்பட்டன. இதில் 10 சிறுநீர் கழிப்பிடங்களும் அடங்கும். இவற்றை பராமரிக்க அங்காடி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கழிவறைகளும் சுத்தமாக உள்ளதா என்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தினமும் ஆய்வு மேற்கொள்கிறார்.இந்நிலையில் மார்க்கெட் வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று வளாக சாலைகளை ஒட்டியுள்ள இடங்களில் கூடுதலாக 10 நவீன கழிவறைகள் விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதலாக 10 நவீன கழிவறைகள்: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.