சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பால் அனைத்து பூக்களின் விலையிலும் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகை மற்றும் அதை தொடர்ந்து வந்த நாட்களில் அனைத்து பூக்களின் விலையும் சர்ரென உயர்ந்தது. மேற்கண்ட நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தாலும், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும், நேற்று காலை முதல் தொடர் மழை மற்றும் சில்லறை வியாபாரிகள், பொதுமக்களின் வருகை மற்றும் பூக்கள் வரத்து குறைவு காரணமாக, அனைத்து பூக்களின் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவியது. நேற்று பூக்களின் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ மல்லி ரூ.2000லிருந்து ரூ.1,500 ஆக சரிந்தது.
ஐஸ்மல்லி ரூ.1,700லிருந்து ரூ.1,200க்கும், அரளிப்பூ ரூ.200லிருந்து ரூ.150, சாமந்தி ரூ.120லிருந்து ரூ.40, சம்பங்கி ரூ.200லிருந்து ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.100லிருந்து ரூ.60, சாக்லேட் ரோஸ் ரூ.150லிருந்து ரூ.130க்கு என்ற விலை சரிவுடன் மந்தகதியில் விற்பனை நடைபெற்றது. எனினும், வரத்து குறைவு காரணமாக முல்லை ரூ.900லிருந்து ரூ.1,200, ஜாதிமல்லி ரூ.700லிருந்து ரூ.1,200, கனகாம்பரம் ரூ.900லிருந்து ரூ.1000 என விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையில் சற்று சரிவு appeared first on Dinakaran.