கோயம்பேடு – ஆவடி மெட்ரோ புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம் : ரூ.6,500 கோடி கட்டுமானச் செலவு என கணிப்பு!!

2 hours ago 3

சென்னை : கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் – சோளிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தை கோயம்பேடு வழியாக ஆவடி வரை நீட்டிப்பது குறித்த ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரையில் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான சீரமைப்பு நீளம் 16.1 கிமீ ஆகும்.

இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிமீ ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி மதிப்பிலான கட்டுமானச் செலவு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான நீளத்தில் சுமார் 15 உயர்த்தப்பட்ட நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான மெட்ரோ நிலையம், ஆவடியில் அல்லது பட்டாபிராமில் உள்ள வெளிவட்டச் சாலையில் அருகே உள்ள காலி இடத்தில் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. கோயம்பேடு, பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் எஸ் ஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயில், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது முகப்பேரில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

The post கோயம்பேடு – ஆவடி மெட்ரோ புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம் : ரூ.6,500 கோடி கட்டுமானச் செலவு என கணிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article