கோத்தகிரியில் மிதமான மழை

1 month ago 8

 

கோத்தகிரி, அக்.15: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. கோத்தகிரி, குன்னூர், உதகை மலைப்பாதையில் சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வாகனங்களை இயக்கி சென்றனர். காலநிலை மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தமிழகத்தில் துவங்க உள்ள நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை முதலே கோத்தகிரி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமானது முதல் சாரல் மழை பெய்தது.

இதனால், கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, பாக்கியநகர், அம்பேத்கர் நகர், பேரார், மைனலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால், பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டப்படி இயக்கி சென்றனர்.

The post கோத்தகிரியில் மிதமான மழை appeared first on Dinakaran.

Read Entire Article