கோத்தகிரி: நீலகிரி மாவட்ட கோத்தகிரி காந்தி மைதானத்தில் புகையிலைப் பொருட்களை ஒழிக்கும் விதமாக தீபிகா குரூப்ஸ் மற்றும் அரவேணு கால்பந்து சார்பில் 19 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தினர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் அன்னிக்கொரை அணியும், திம்பட்டி அணியும் மோதின.
தொடர்ந்து டைப்பிரேக்கர் முறையில் அன்னிக்கொரை அணி வெற்றி பெற்றது. இதுபோல ஒரசோலை அணியும், கேர்பெட்டா அணியும் மோதின. இதில் கேர்பெட்டா அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் வழங்கப்பட்டன. தோல்வியடைந்த அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டன. சிறந்து விளையாடிய கால்பந்து வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க பட்டது.
இதில், சாந்தி குரூப் நிர்வாக இயக்குனர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில், நீலகிரி மாவட்ட கால்பந்து கழக துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் மோகன முரளி மற்றும் நிர்வாகிகள், அதிமுக பேரூராட்சி செயலாளர் நஞ்சு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர். இந்த போட்டியை அரவேணு எப்சி நிர்வாக இயக்குனர் முன்னாள் தமிழக கால்பந்து வீரர் கௌஷிக் ஏற்பாடு செய்திருந்தார்.
The post கோத்தகிரியில் ஐவர் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.